Sunday, February 6, 2011

இல்லற வாழ்க்கை

எனக்கு ஒரு நல்ல கணவன் அமையுமாறு கடவுளை கேட்டேன். அது போலவே எனக்கு நல்ல குணம் உடைய கணவன் அமைந்தார்.
எங்கள் திருமணம் ஒரு காதல் திருமணம். 

அதன் பிறகு என் வாழ்க்கை மும்பை மாநகரத்தில் தொடங்கியது. என்னுடைய அம்மா ( மாமியார்) , அப்பா ( மாமனார்) , என் ( கணவரின் ) சகோதர்கள் , சகோதரி , என் மீது மிகவும் அன்பும் , பாசமும் செலுத்துபவர்களாக கிடைத்தார்கள். அது மட்டுமில்லால்  என் கணவரின் இல்லம் இன்னொரு தாய் வீடாக அமைந்தது. என்னிடம் எந்த வரதட்சனையும் எதிர்ப்பார்க்காமல் என் கணவர் என்னை திருமணம் செய்து கொண்டார். என் மீது மிகவும் அன்பு செலுத்துபவர். எனக்கு தந்தை இல்லாத குறையை தீர்த்து வைத்தார். 

மும்பை நகர வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் செல்லம் மிகவும் சுட்டி. எந்த கவலை இருந்தாலும் அவள் முகத்தை பார்த்தால் ஒரு நொடியில் கவலை மறந்து விடும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் என் கணவருக்காக, நான் பொறுத்துக்கொள்வேன். குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது. ஒருவருடைய தனித்தன்மையை ரசிப்பது.  துன்பங்கள் வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம்

இது ஒரு உண்மைச்சம்பவம் - என் அப்பாவின் நண்பர்கள்

இந்த உண்மைச்சம்பவம் ஆறு வருடங்களுங்கு முன்பு நடந்தது. இந்த துன்பம் என்னுடைய மனதில் ஒரு பாரமாகஇருந்தது. இதை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால்  எனக்கு மனதில் ஒரு அமைதி கிடைக்கும். என்னுடைய தந்தை மருத்துவமனையில்   சிகிச்சை பெரும் போது நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த இன்பத்தை தந்தையிடம் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. அந்நாளில் அவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ,எந்தஉறவினரும் அவரை அடக்கம் செய்ய கூட உதவவில்லை. இந்த நிகழ்வு அவருடைய எந்த நண்பர்க்கும் என் தாய் தெரியபடுத்தவில்லை.

ஒரு வழியாக எல்லா துன்பத்தையும் தாங்கிக்கொண்டு   நானும் என் தாயும் எல்லா காரியத்தயும் முடித்த பிறகு, என்னுடைய தந்தையின் உடன் பிறந்தவர்கள் பல பிரச்சினைகளை உருவாக்கினர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்த போது  , என் தந்தை வாழ்ந்த வீட்டை விட்டு வழி தெரியாமல் , என் தாய்பிறந்த வீட்டிக்கு சென்றோம். அங்கேயும் பல பிரச்சனைகள். அதன் பிறகு நாங்கள் தனியே வந்து , எங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினோம். அப்போது, தந்தையின் நண்பர் எங்களுக்கு உதவிகள் செய்தார். அப்போது வாழ்கை என்பது என்னவென்று தெரியாத நிலையில் இருந்தபோது  எனது தந்தையின் நண்பர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார். அவர் என்னை நன்றாக படிக்கச் சொன்னார். அவரின் குடும்பமும் உதவிகள் செய்தனர். அப்போது தான் எனக்கு நட்பின் அருமை புரிந்தது. என் அப்பா நண்பர்களுடன் சுற்றும் போது எனக்கும் , என் தாய்க்கும்
சிறிதும் பிடிக்கவில்லை. எப்போதும் நண்பர்கள் புராணமே பாடுவார். 

நாங்கள் வெறுத்த என் அப்பாவின் நண்பர்கள் தான் எங்களுக்கு உதவிகள் செய்தனர். நட்பு என்பது வாழ்வில் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்

Saturday, February 5, 2011

இது ஒரு உண்மைச்சம்பவம்


                                     
                         ஒரு  வீட்டில்  தாயோ  தந்தையோ இல்லையென்றால்  அது  குடும்பமே  அல்ல? ஏனென்றால் அந்தக்  குடும்பம் உடைந்து போய்விடும். என்னுடைய குடும்பத்தில் , எனது தந்தையின் மூளையில் கட்டி இருந்ததது.. அவரை சென்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்றோம். ஆனால், அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. அவருக்கு சுய நினைவு
இல்லாமல் எல்லாம் மறந்து போய்விட்டது . தன்னுடைய மனைவி, மகள் இவர்கள் யாருமே அவருக்கு நினைவில்லை. அந்த நிலையில் அவர் பேசுவதையும் இழந்துவிட்டார். தன்னுடைய குடும்பத்திற்கு உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் எவருமே உதவிகள் புரியவில்லை.

                                                                                                                                         - தொடரும்